திருப்பத்தூரில் பல்வேறு துறைகள் சார்பில் - 3,236 பயனாளிகளுக்கு ரூ.41 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

திருப்பத்தூரில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு. அருகில், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, எம்எல்ஏக்கள் தேவராஜி, நல்லதம்பி, வில்வநாதன் உள்ளிட்டோர்.
திருப்பத்தூரில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு. அருகில், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, எம்எல்ஏக்கள் தேவராஜி, நல்லதம்பி, வில்வநாதன் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

திருப்பத்தூரில் பல்வேறு துறைகளின் சார்பில் 3,236 பயனாளிகளுக்கு ரூ.41 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று வழங்கினார்

பல்வேறு துறைகளின் சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), வில்வ நாதன் (ஆம்பூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை), மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சூரியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு, பல்வேறு துறைகள் சார்பில் 3 ஆயிரத்து 236 பயனாளிகளுக்கு ரூ.41 கோடியே 11 லட்சத்து 40 ஆயிரத்து 582 மதிப்பில் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட இயக்குநர் செல்வராசு நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in