

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத தமிழக அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, பாஜக பட்டியலின அணி சார்பில், நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பட்டியலின அணி மாவட்டத் தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் தர்மலிங்கம், ரவி, நாகராஜ், அன்பரசன் முன்னிலை வகித்தனர்.அப்போது, நிர்வாகிகள் பேசுகையில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கவேண்டும். இக்கோரிக்கையை நிறைவேற்றும்வரை பாஜக சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.
ஆர்ப்பாட்டம்