வாழ்வாதாரம் காக்க வலியுறுத்தி சூளகிரி சாலையோர வியாபாரிகள் மனு :

வாழ்வாதாரம் காக்க வலியுறுத்தி சூளகிரி சாலையோர வியாபாரிகள் மனு :
Updated on
1 min read

கடைகள் வைக்க மாற்று இடம் வழங்கி தங்களது வாழ்வாதாரம் காக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சூளகிரி சாலையோர வியாபாரிகள் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சாலையோரம் சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் நேற்று, ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:

சூளகிரியில் நாங்கள் அனைவரும் பூக் கடை, பழக்கடை, காய்கறி கடை, வெற்றிலை கடை, தள்ளு வண்டி உணவகம், கூழ் விற்பனை, கோலமாவு விற்பனை மற்றும் இறைச்சிக் கடை உள்ளிட்ட கடைகளை நடத்தி வந்தோம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக 500-க்கும் மேற்பட்ட கடைகளை நடத்தி வந்த நிலையில், கடந்த 10-ம் தேதி, தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் சிலர் எங்கள் கடைகளை அகற்றிவிட்டனர். தற்போது எங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். எனவே, எங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கிக் கொடுத்து, எங்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in