பேரிடர்களில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் பொருளை தவிர்ப்போம் : அமைச்சர் மெய்யநாதன் வலியுறுத்தல்

பேரிடர்களில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் பொருளை தவிர்ப்போம் :  அமைச்சர் மெய்யநாதன் வலியுறுத்தல்
Updated on
1 min read

பேரிடர்களில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குரும்பக்காட்டில் மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு நேற்று அவர் பரிசு வழங்கி பேசியது:

தமிழகம் முழுவதும் சிறந்த சிலம்ப வீரர்கள் 100 பேரை தேர்வு செய்து, தலா ரூ.1 லட்சம் வீதம் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர். சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களின் கலையான சிலம்பம் தோன்றியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும், இது எந்த பகுதியில் தொடங்கியது என்று ஆய்வு செய்யப்படும்.

சிலம்பத்தைக் கற்றுக்கொண்ட பள்ளி மாணவர்கள், அனைத்து விதமான உயர் கல்வியையும் 3 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் பெறுவதற்கான அரசாணையை தமிழக அரசு இயற்றியுள்ளது.

மேலும், சிலம்பத்தை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் 25 லட்சம் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை உருவாக்குவதற்கான பணிகளை அரசு முன்னெடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களில் இருந்து நாம் தப்பிக்க வேண்டும் என்றால் முதலில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். அத்துடன், இனப்பெருக்கம் செய்யாத, பறவைகள் உட்காருவதற்குக்கூட பயன்படாத வெளிநாட்டு ரக மரங்களைத் தவிர்த்துவிட்டு, பூவரசு, வேம்பு, அரசு, ஆலமரம் போன்ற நாட்டு மரக்கன்றுகளை நட வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in