

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: தொடர் மழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் சுமார் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் அதிகளவு நீர்வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழைக்காரணமாக பள்ளி, கல்லூரிக்கு இன்று (30-ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.