

மின்வெட்டு விவகாரத்தில் ஜெய லலிதா தெளிவில்லாமல் பேசு கிறார் என விழுப்புரத்தில் திரைப் பட குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் திமுக வேட்பாளர் முத்தையனை ஆதரித்து சனிக் கிழமை குஷ்பு பேசியதாவது: திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி எப்படி இருந்தது என்று எண்ணிப் பாருங்கள். திமுக ஆட்சியில் 13.7 சதவீதமாக இருந்த வளர்ச்சி தற்போது 4 சதவீதமாக உள்ளது. சர்வதேச தொழில் நிறுவனங்கள் எதுவும் தற்போது தொழில் தொடங்க தமிழகத்திற்கு வருவதில்லை.
திமுக ஆட்சியில் இரண்டு மணி நேரம் இருந்த மின்வெட்டு தற்போது 10 முதல் 12 மணி நேரம் வரை நீடிக்கிறது. திமுக ஆட்சியில் மின்சார உற்பத்திக்கு எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லை எனக் கூறிய ஜெயலலிதா பிறகு எப்படி நான் ஆட்சிக்கு வந்தால் இரண்டே மாதத்தில் மின்வெட்டைப் போக்கி விடுவேன் என்று கூறினார். தற்போது மின்வெட்டு விவகாரத்தில் ஏதோ சதி நடப்பதாக சொல்கிறார். இப்படி தெளிவில்லாமல் பேசி மக்களைக் குழப்புகிறார்.
அதிமுக வேட்பாளர்கள் தங்கள் பகுதிகளுக்கு வரக்கூடாது என்று பொதுமக்கள் சாலைமறியல் செய்து, கருப்பு கொடி காட்டு கின்றனர் என்று குஷ்பு பேசினார்.
விழுப்புரம் திமுக வேட்பாளர் முத்தையனை ஆதரித்து குஷ்பு பேசுகிறார்.