கரூரில் அதிமுகவினர் மிரட்டப்படுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி குற்றச்சாட்டு

கரூரில் அதிமுகவினர் மிரட்டப்படுகின்றனர் :  ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி குற்றச்சாட்டு
Updated on
1 min read

கரூர் மாவட்டத்தில் திமுகவில் சேருமாறு அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மிரட்டப்படுகின்றனர் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் குற்றம் சாட்டியுளளனர்.

இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாகவாக்களிக்கும்படி அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மிரட்டப்பட்டு வந்தனர். மேலும், 4 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதால் திமுக வெற்றி பெற முடியாது என்று தேர்தலையே தள்ளிவைத்துள்ளனர். தேர்தல்நடத்தும் அதிகாரி ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார்.

பொய் வழக்கு பதிவு

ஆனால், அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தூண்டுதலின்பேரில், காவல் துறையினர் மற்றும் அதிகாரிகளைக் கொண்டு, அதிமுக மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் அதிமுகவைச் சேர்ந்த, மாவட்ட ஊராட்சிக் குழு 2-வது வார்டு உறுப்பினர் அலமேலுவின் கணவர் குட்காவைத்திருந்ததாகக் கூறி, ஜாமீனில் வெளியில்வர முடியாத பிரிவுகளில் பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த18-ம் தேதி அவர் திமுகவில்இணைந்து விட்டார். அதேபோல, 10-வது வார்டு உறுப்பினர் நல்லமுத்து வடிவேலுவும் திமுகவினரின் மிரட்டலால், அக்கட்சியில் இணைந்துள்ளார்.

அதிகாரிகள், போலீஸார் உடந்தை

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in