

மதுரை மாவட்டம், அலங்கா நல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. வட்டாரக் கல்வி அலுவலர்கள் அகிலத்து இளவரசி, மணி மேகலை ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவி, ஆசிரியர் கருத்தாளர்கள், ஆசி ரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.