திண்டுக்கல்லில் தீப்பற்றி எரிந்த கார் :

திண்டுக்கல்லில் தீப்பற்றி எரிந்த கார் :
Updated on
1 min read

திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஜெயராமன். இவர், தனது மகன் ஜெகனுடன் நேற்று மாலை காரில் ஆர்.எஸ்.சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் பேனட்டில் இருந்து புகை கிளம்பியது. காரை நிறுத்திவிட்டு பேனட்டை திறந்துபார்த்தபோது திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கார் முற்றி லும் சேதமடைந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in