Regional02
விருதுநகர் அருகே கோயிலில் திருட்டு :
விருதுநகர் அருகே மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் பாண்டியன் நகர் முத்தால் நகரில் முள்ளு மாரியம்மன் கோயில் உள்ளது. பூசாரி கிருஷ்ணசாமி, அவரது மனைவி கிருஷ்ணம்மாள் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கோயிலைப் பூட்டிவிட்டு சென்றனர்.
நேற்று அதிகாலை கோயிலைத் திறக்க வந்த போது கோயில் பூட்டை காணவில்லை. கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடுபோயிருந்தது.
இது தொடர்பாக பாண்டியன் நகர் காவல்நிலையத்தில் பூசாரி கிருஷ்ணசாமி புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
