தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் :

மேலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர்.
மேலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர்.
Updated on
1 min read

மேலப்பாளையம், சந்தை ரவுண்டானாவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி, மேலப் பாளையம் மண்டலத்தில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில் வார்டுகளைக் குறைத்திருப்பதாகக் கூறியும், வார்டு மறு வரையறை திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில துணை பொதுச் செயலாளர் அப்துல் கரீம் உரையாற்றினார். மாவட்டத் தலைவர் மசூத் உஸ்மானி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் யூசுப் அலி, நிர்வாகிகள் சுலைமான் பிர்தவுசி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in