

பெரம்பலூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழையால் மகசூல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், மறுசாகுபடி செய்ய தேவையான இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மழை, வெள்ள சேதங்களை நேற்று அனைத்து விவசாயிகள் சங்க கூட்டுக் குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் என்.செல்லதுரை, ஏ.ஆரோக்கியசாமி, ஏ.கே.ராஜேந்திரன், அன்பரசு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர், அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:
பெரம்பலூர் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்த பருவமழை காரணமாக மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பாசன ஏரிகள் நிரம்பி வழிகின்றன. அதேசமயம் நீர்வரத்து வாய்க்கால்கள் மரா மத்து செய்யப்படாததால் எசனை, காரை, து.களத்தூர் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பாமல் உள்ளன.
தெரணி பெரிய ஏரி உள் ளிட்ட சில ஏரிகளில் மதகு சரி செய்யப்படாததால் நீர்வரத்து அதிகரிக்கும்போது உபரி நீர் வெளியேற வழியில்லாமல், கரை உடைந்து பொதுமக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள் ளது. மேலும் மருதையாறு கொட் டரை நீர்த்தேக்கம், கல்லாறு விசுவக்குடி நீர்த்தேக்கம் ஆகிய வற்றில் பாசன வாய்க்கால்கள் சரிசெய்யப்படாததால் இவற்றி லிருந்து வெளியேறும் தண்ணீர் பாசனத்துக்கு பயன்படாமல் விர யமாகிறது. எனவே, இவற்றை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மாவட்டத்தில் பயிரிடப் பட்டுள்ள சின்ன வெங்காயம் வேர்அழுகல் நோயாலும், பருத்தி காய், பிஞ்சுகள் செடியிலேயே அழுகியும், நிலக்கடலை வயலி லேயே முளைத்தும் முற்றிலும் வீணாகிவிட்டன. அதேபோல மரவள்ளிக்கிழங்கு, நெற்பயிர், கரும்பு உள்ளிட்ட பயிர்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.
மகசூல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் மறுசாகுபடி செய்ய தேவையான இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.