

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகேயுள்ள ஆலத்துடையான் பட்டியைச் சேர்ந்தவர் ராஜ மாணிக்கம் மகன் பிரபு(37). இவர், துறையூர் பாலக்கரையில் சுமை ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு பிரபு வேலையை முடித்துவிட்டு, ஆலத்துடையான்பட்டியிலுள்ள தனது மனைவி வீட்டுக்குச் சென்றார். அப்போது, அவரு டைய செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியபடி வெளியே சென்ற பிரபு மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், நேற்று காலை எம்ஜிஆர் காலனி அருகே உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. தகவ லறிந்த எஸ்.பி சுஜித்குமார், முசிறி டிஎஸ்பி அருள்மணி, துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் அங்கு சென்று விசாரித்தனர். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.