

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகேயுள்ள மல்லியம்பத்தை அடுத்த செங்கதிர்சோலை பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் சிவா (எ) சிவகுமார்(50). விவசாயியான இவரை, நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சிவக்குமாரை அப்பகுதி மக்கள் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே பகுதியிலுள்ள பிடாரி அம்மன் கோயில் திருவிழா தொடர்பான பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதத்தால் இக்கொலை நிகழ்ந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.