

தமிழகத்தில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
வருமான வரி செலுத்துவோரின் விவரங்களை, அவர்களது ஆதார்எண்ணுடன் வழங்கும்படி வருமானவரித் துறையை, உணவுத் துறைகேட்டுள்ளது. இந்த திட்டத்தில்உள்ள பயனாளிகளை குறைக்கும் வகையில், வருமான வரி விவரங்களை தமிழக அரசின் உணவுத் துறை கேட்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, முறைகேட்டை தடுக்கவே, வருமான வரிசெலுத்துவோரின் விவரங்களை கேட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
வருமான அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, அனைவருக்குமான பொது விநியோகத் திட்ட நோக்கத்தையே சீர்குலைப்பதாகும். இதை ஏற்க முடியாது.
அதிமுக எதிர்க்கும்
முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி, அனைவருக்குமான ரேஷன் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.