வாகனத் திருட்டில் ஈடுபட்டவர் கைது ஈரோட்டில் 25 வாகனங்கள் பறிமுதல் :

வாகனத் திருட்டில் ஈடுபட்டவர் கைது  ஈரோட்டில் 25 வாகனங்கள் பறிமுதல்  :
Updated on
1 min read

ஈரோட்டில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 25 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் அருகே நகர காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள கபிலர்மலையைச் சேர்ந்த காக்கிச்சட்டை (எ) முருகேசன் (35) எனத் தெரியவந்தது.

இரு சக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்யும் நபர் எனவும், இதுவரை ஈரோடு மாவட்டத்தில் 25 வாகனங்களை திருடி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் 25 வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in