

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசலு(38). இவருக்கும் சென்னையைச் சேர்ந்த கனிமொழி (32) என்பவருக்கும் பெங்களூருவில் கடந்த 21-ம் தேதி திருமணம் நடந்தது. மனைவி மற்றும் உறவினர்களுடன் சீனிவாசலு, கடந்த 22-ம் தேதி நள்ளிரவில் தனது காரில் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டார்.
கிருஷ்ணகிரி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுண்டம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் சீனிவாசலு உயிரிழந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கனிமொழியும் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கந்திக்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.