எம்ஜிஆருக்கு சிறுநீரகம் தானம் கொடுத்த - லீலாவதி சென்னையில் காலமானார் :

எம்ஜிஆருக்கு சிறுநீரகம் தானம் கொடுத்த -  லீலாவதி சென்னையில் காலமானார் :
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு சிறுநீரகம் தானம் வழங்கிய அவரது அண்ணன் மகள் லீலாவதி, உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று முன்தினம் இரவு காலமானார்.

எம்ஜிஆருக்கு சிறுநீரகக் கோளாறுஏற்பட்டபோது. அவரது அண்ணன்எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி சிறுநீரக தானம் வழங்கினார்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர்,37 ஆண்டுகள் சென்னை பெருங்குடியில், தனது மகளுடன் லீலாவதி(71) வசித்து வந்தார். உடல் நலக் கோளாறு காரணமாக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லீலாவதி நேற்று முன்தினம் இரவு காலமானார்.

அவரது உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஏரிக்கரை மயானத்தில் லீலாவதியின் உடல் நேற்று இரவு தகனம் செய்யப்பட்டது. அவருக்கு மகள்கள் மினி நந்தன், ஹேமா முரளி உள்ளனர்.

லீலாவதி மறைவுக்கு அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, அமமுக பொதுச் செயலர்தினகரன், காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர் இரங்கல் தெரிவித்துள்ளனர். லீலாவதி 2017-ல் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in