

நீலகிரி மாவட்ட ஆட்சியராக ஜெ.இன்னசென்ட் திவ்யா, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார். கடந்த மாதம் தனது மகனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், அவர் தன்னையும் தனிமைப்படுத்திக் கொண்டார். அதன்பின் அவர் பணியில் சேராமல், விடுப்பிலேயே இருந்து வந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகித்து வந்தார். .
இந்நிலையில், நீலகிரி மாவட்டஆட்சியராக எஸ்.பி.அம்ரித் நியமிக்கப்பட்டார். இவர், தமிழகஅரசு நகராட்சி நிர்வாகங்கள் இணை ஆணையராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று காலை உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் மாவட்டத்தின் 114-வது ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட எஸ்.பி.அம்ரித்கூறும்போது, ‘‘அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன். நீலகிரி மாவட்டம் சூழலியல் முக்கியத்துவமான பகுதி என்பதால் மனிதர்கள் மற்றும்விலங்குகள் வாழ ஏற்ற மாவட்டமாக விளங்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற எஸ்.பி அம்ரித். படம்:ஆர்.டி.சிவசங்கர்