விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுகவில் விருப்ப மனு வழங்கல் :

வளவனூர் பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தொடங்கி வைத்தார்.
வளவனூர் பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுகவில் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதனையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், 29-ம் தேதி வரை கட்சியின் மாவட்ட அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

அந்தவகையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரான மாவட்ட செயலாளர் சிவி சண்முகம் நேற்று விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது வானூர் எம்எல்ஏ சக்ரபாணி,மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பசுபதி, மாவட்ட பேரவை செயலாளர் முரளி ரகுராமன்,மாவட்ட பேரவை தலைவர் ராமதாஸ்,கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in