கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 1 லட்சம் ஏக்கர் ராகி பயிர்கள் சேதம் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 1 லட்சம் ஏக்கர் ராகி பயிர்கள் சேதம் :
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடு பவர்களுக்கு விருப்ப மனுக்களை, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி வழங்கி னார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் ராகி பயிர் மற்றும், 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி இருந்த நிலையில் சேதமடைந்துள்ளது. தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதுபோல் கிருஷ்ணகிரி விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.பேரிடர் மீட்பு பணிகளில் தற்போது தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் முதலில்நிவாரணம் வழங்க வேண்டும். எதிர்க்கட்சியை குறைகூறுவது முதல்வருக்கு அழகல்ல. அதிமுக ஆ ட்சியில் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்படுவது போல், தற்போது செயல்படவில்லை.

வேப்பனப்பள்ளி ஆற்றில் வந்த தண்ணீரை, கால்வாய்கள் சீரமைத்து 15-க்கும் மேற்பட்ட ஏரிகளில் நிரப்பி உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது எம்எல்ஏ-க்கள் அசோக்குமார் (கிருஷ்ணகிரி), தமிழ்செல்வன் (ஊத்தங்கரை) ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in