துறையூரில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் - லாரி உரிமையாளர்கள் கூட்டம் :

துறையூரில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில்  -  லாரி உரிமையாளர்கள் கூட்டம் :
Updated on
1 min read

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் திருச்சி கோட்ட அலுவலகம் சார்பில் துறையூர் லாரி உரிமையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுடனான கூட்டம் நவ.24-ம் தேதி துறையூரில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சென்னை கோட்ட அலுவலக பொதுமேலாளர் மற்றும் கோட்ட சில்லறை விற்பனைப் பிரிவு தலைவர் அபிஷேக் சர்மா தலைமை வகித்தார். தமிழ்நாடு தலைமை மேலாளர் (ப்ளீட் மார்க்கெட்டிங்) கே.ரமேஷ், திருச்சி கோட்ட சில்லறை விற்பனைப் பிரிவு தலைவர் ஆர்.ராஜேஸ்வரன், துறையூர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் எஸ்.நடராஜன், நிர்வாகிகள் பி.பாஸ்கர், எஸ்.கலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

இந்த கூட்டத்தில் ஏறத்தாழ 150 லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் குறித்து மேலாளர் (ப்ளீட் மார்க்கெட்டிங்) வி.ஜகன்நாதன் விரிவாக விளக்கமளித்தார். சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் சங்கர், லாரி உரிமையாளர்களுக்கான கடன் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.

இந்த கூட்டத்தில் சென்னை, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த டீலர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in