

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் அருகே உள்ள அச்சம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (33). கூலித் தொழிலாளி. இவரை, கடந்த 23-ம் தேதி தெற்கு கிடாரக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் (23) என்பவர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கருப்பசாமி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கோபாலை கைது செய்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கருப்பசாமி உயிரிழந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக போலீஸார் பதிவு செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர் ஒருவரின் மனைவியுடன் கருப்பசாமிக்கு தொடர்பு இருந்ததாக ஏற்பட்ட சந்தேகத்தில், அந்த பெண்ணின் உறவினரான கோபால் அரிவாளால், கருப்பசாமியை வெட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.