Regional01
மந்தமாக நடக்கும் குருவிக்காரன் சாலை பாலப் பணி :
மதுரை குருவிக்காரன் சாலை யில் வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடக்கிறது. கரோனா தொற்று பரவியதால் பாலம்் கட்டும்் பணி தாமதமானது. தற்போது மழை பெய்வதால் மீண்டும் கட்டுமானப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. இப்பாலம் கட்டும் பணியை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகரப் பொறியாளர் அரசு, உதவி செய ற்பொறியாளர் சேகர் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
