

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக நேற்று கனமழை பெய்தது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு காற்றுச் சுழற்சி காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்றும் பரவலாக கனமழை பெய்தது. திருவாரூரில் 38.6 மி.மீ, நீடாமங்கலம், மன்னார்குடியில் தலா 22.8 மி.மீ மழை பதிவானது. மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.