நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தூத்துக்குடி மாவட்ட - அதிமுகவினர் நாளைமுதல் விருப்ப மனு அளிக்கலாம் :

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்:  தூத்துக்குடி  மாவட்ட -  அதிமுகவினர் நாளைமுதல் விருப்ப மனு அளிக்கலாம் :
Updated on
1 min read

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அதிமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று முதல் முதல் வரும் 28-ம் தேதி வரை தூத்துக்குடி டூவிபுரம் 7-வது தெருவில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் வைத்து விருப்ப மனு வழங்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை அதே அலுவலகத்தில் வழங்கலாம். மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரம், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,500 கட்டணத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் நகராட்சி நீங்கலாக, தூத்துக்குடி மாநகராட்சி, வைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதி கட்சியினர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் செ.ராஜு எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கை: தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் எனது தலைமையில் இன்று முதல் 28-ம் தேதி வரை கோவில்பட்டியில் மணியாச்சி விலக்கு கட்சி அலுவலகத்திலும், விளாத்திகுளத்தில் சக்தி விநாயகர் திருமண மண்டபத்திலும் விருப்ப மனு வழங்கப்படுகிறது. கோவில்பட்டி நகராட்சி உறுப்பினர், கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை, எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in