விசாரணை கைதி உயிரிழப்பு :

விசாரணை கைதி உயிரிழப்பு :
Updated on
1 min read

தி.மலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (38). இவர், கடந்த மாதம் 7-ம் தேதி திருட்டு வழக்கில் ஆரணி காவல் துறையினர் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கடந்த 19-ம் தேதி லோகநாதனுக்கு பக்கவாதம் ஏற்பட்டு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு லோகநாதன் உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in