பணி நிரந்தரம் செய்ய துப்புரவு ஊழியர்கள் வலியுறுத்தல்  :

பணி நிரந்தரம் செய்ய துப்புரவு ஊழியர்கள் வலியுறுத்தல் :

Published on

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆர்சிஎச் ஒப்பந்த சுகாதார துப்புரவுப் பணியாளர்கள் நலச் சங்கப் பொதுச் செயலர் ஏ.ஆர்.சாந்தி, கவுரவத் தலைவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், தலைவர் என்.எஸ்.செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் அளித்த மனு விவரம்:

தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, மாநில அரசின் நிரந்தர தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்துக்கு நிகராக ஊதியம் வழங்க வேண்டும். வார விடுமுறை, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு போன்ற விடு்ப்புகளை வழங்க வேண்டும். கரோனா பணிக்கான சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in