

தேனாம்பேட்டை காவல் நிலைய கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.
இதையடுத்து, இந்த வளாகத்தில் செயல்பட்டு வந்த சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து பிரிவு மற்றும் தேனாம்பேட்டை சரக உதவி ஆணையர் அலுவலகம் ஆகியவை நாளை (நவ.25) முதல் தேனாம்பேட்டை, தியாகராயசாலை, ஆலையம்மன் கோயில் வளாகம், எண் 2ஏ என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.