கள்ளக்குறிச்சி அருகே - பிளஸ் 2 மாணவன், மாணவி தற்கொலை :

கள்ளக்குறிச்சி அருகே -  பிளஸ் 2 மாணவன், மாணவி தற்கொலை :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சியை அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் ஒருமாணவனும், மாணவியும் ஒரு வரையொருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவரஅவர்கள், எதிர்ப்புத் தெரிவித்துள் ளனர்.

இந்த நிலையில், அந்த மாணவிகடந்த 21-ம் தேதி தனது வீட்டில்இருந்து திடீரென மாயமாகியுள் ளார். மாணவி மாயமானதைத் தொடர்ந்து அவரது பெற்றோர் கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மாணவி பயன்படுத்தி வந்த செல் போனைக் கொண்டு போலீஸார், அவரைத் தேடிவந்தனர்.

இதனிடையே கள்ளக்குறிச்சி அருகே உள்ள சோமண்டார்குடி ஆற்றங்கரைப் பகுதியில், மாண வன் ஆற்றுப் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய படியும், மாணவி ஆற்றில் மிதந்த படியும் இறந்து கிடந்தனர். இரு வரின் சடலங்களை போலீஸார் நேற்று மீட்டனர்.

தற்கொலை செய்து கொண்ட மாணவனுக்கு பெற்றோர் இல்லை. தாத்தாவின் பாதுகாப்பில் தான் வளர்ந்து வந்தார்.

மேலும் மாணவியின் தாய் கேரளாவில் கூலி வேலை செய்துவரும் நிலையில், பாதுகா வலர்களின் போதிய கவனிப் பாரின்றி இரு வரும் தவறான செயலில் ஈடுபட்டு தற்கொலை நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்று காவல் துறை யினர் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in