ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்கக் கோரி - போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் :

திருச்சி சுப்பிரமணியபுரம் டோல்கேட் பகுதியில் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சிஐடியு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் .
திருச்சி சுப்பிரமணியபுரம் டோல்கேட் பகுதியில் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சிஐடியு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் .
Updated on
1 min read

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி சிஐடியு அரசுப் போக்கு வரத்துக் கழக ஊழியர்கள் சங்கத் தினர் நேற்று திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பணிமனைகள் முன் உண்ணாவிரதம் இருந்தனர்.

வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை போக்கு வரத்துக் கழகங்களுக்கு அரசு உடனே வழங்க வேண்டும். 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் தையை உடனே தொடங்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை எதிரே நேற்று நடை பெற்ற போராட்டத்துக்கு கிளையின் சிஐடியு உதவித் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், சம்மேளன குழு உறுப்பினர் முத்துவேல் உள்ளிட்டோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர்.

இதேபோல, கன்டோன்மென்ட பகுதியில் உள்ள புறநகர் பணிமனை முன் நடைபெற்ற உண்ணாவிரதத் தில் முத்துக்கருப்பன், கருணாநிதி, சீனிவாசன், லோகநாதன், கார்த்திகேயன், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே கோரிக்கையை வலியு றுத்தி, கரூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன் சிஐடியு கிளை தலைவர் வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலும், குளித்தலை போக்குவரத்துக்கழக பணிமனை முன் கிளை செயலாளர் செல்வ ராஜ் தலைமையிலும் நேற்று நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பலர் பங்கேற்றனர்.

இதேபோல, அரியலூர் போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) மூத்த நிர்வாகி எம்.ராமதாஸ் தலைமை வகித்தார். சிஐடியு பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.சிவானந்தம், அரியலூர் மாவட்ட துணைத் தலைவர் எம்.சந்தானம், மாவட்ட துணைச் செயலாளர் கே.கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

புதுக்கோட்டையில் சிஐடியு பொதுச்செயலாளர் சி.பாலசுப்பிர மணியன் தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் மாவட்ட செயலாளர் ஏ.தர் பேசினார்.

கந்தர்வக்கோட்டையில் சங்கத்தின் நிர்வாகி கார்த்திகேயன் தலைமையிலும், ஆலங்குடியில் நிர்வாகி ஜெய்ராம் தலைமையிலும் உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது.

நாகை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன் மத்திய தொழிற்சங்க துணை செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் நிர்வாகிகள் சண்முக சுந்தரம், மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in