ரங்கம் ரங்கநாதர் கோயிலில் மத்திய பிரதேச முதல்வர் தரிசனம் :

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று தரிசனம் செய்ய வந்த மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் அவரது குடும்பத்தினர்.படம் எம். நாத்
ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று தரிசனம் செய்ய வந்த மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் அவரது குடும்பத்தினர்.படம் எம். நாத்
Updated on
1 min read

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தனது குடும்பத்தினருடன் நேற்று தரிசனம் செய்தார்.

திருச்சி விமான நிலையத்திலி ருந்து கார் மூலம் கோயிலுக்கு வந்த மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு ரங்கம் ரங்கா, ரங்கா கோபுரம் அருகே கோயில் நிர்வாகம் சார்பில் மேள, தாளங்கள் முழங்க மாலை அணிவித்து கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து மற்றும் கோயில் ஊழியர்கள் வரவேற்றனர்.

கோயிலுக்குள் வந்த அவர் ரங்கம் கோயில் யானை ஆண்டாளுக்கு பழங்கள் வழங்கி ஆசி பெற்றார். தொடர்ந்து அவர் மூலவர் மற்றும் அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார். பின்னர், காரில் மீண்டும் விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார்.

அப்போது செய்தியாளர்களி டம் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில், நம் நாடும், மத்திய பிரதேச மாநிலமும் இயற்கை வளத்துடன் வளர்ச்சி பெறவும், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், வளமாகவும் வாழ பிரார்த்தனை செய்தேன் என்றார்.

முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in