

கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் சுந்தர் (30). இவர், கிருஷ்ணாபுரத்தில் ஸ்டீல் பீரோ தயாரிக்கும் வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். வெல்டிங் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது, சுந்தர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கடையநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.