திருப்பத்தூரில் வரும் 27-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் :

திருப்பத்தூரில் வரும் 27-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் :
Updated on
1 min read

தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் திருப்பத் தூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் வரும் 27-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் மேலும் விவரங்களுக்கு திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியரகம், திருப்பத்தூர் மாவட்டம் என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மகளிர் திட்ட அலுவலகத்தை நேரிலோ அல்லது 04179-290324 / 94440-94178 என்ற தொலைபேசி எண்ணிலும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 01479-222033 / 99424-30509 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’ என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in