

திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோரிடம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை கட்சியினர் அளித்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சி, ஒட்டன்சத்திரம், பழநி, கொடைக்கானல் ஆகிய நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து திண்டுக்கல் திமுக அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. கிழக்கு மாவட்டச் செயலாளர் இ.பெ.செந்தில்குமார் முன்னிலையில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் விருப்பமனுக்களை பெற்றனர். நவம்பர் 25-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.