பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைக்காத - தமிழக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் :

பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைக்காத -  தமிழக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கு வரியை குறைக்காத தமிழக அரசைக் கண்டித்து திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினத்தில் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இளைஞரணி மாவட்டத் தலைவர்கள் கார்த்திகேயன், சுதாகர் வெங்கடேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். பாஜக மாவட்டத் தலைவர்கள் ராஜசேகர், அஞ்சாநெஞ்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் கவுதம் பேசினார்.

கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இளைஞர் அணி மாவட்டத் தலைவர் கணேசமூர்த்தி, மகளிர் அணி தலைவர் ஜெயலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். பாஜக மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன் பங்கேற்று பேசினார்.

அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவர் கார்த்திக்கேயன், மகளிரணி மாவட்டத் தலைவர் சுகன்யா ஆகியோரும், பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக நுழைவு வளைவு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் செல்வராஜூம் தலைமை வகித்தனர். தஞ்சாவூரில் ரயில் நிலையம் அருகே மாநில இளைஞரணி செயலாளர் கதிரவன், நாகை அவுரித் திடலில் இளைஞரணி மாவட்டத் தலைவர் சந்தோஷ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in