

திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் நாராயணசாமி. இவரது மகள் மகாலட்சுமி(7). இவர், நேற்று காலை விளையாட சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், அதே பகுதியில் நாராயணசாமி கட்டி வரும் புதிய வீட்டுக்காக, கழிவுநீர் தொட்டிக்கு தோண்டப்பட்டிருந்த 10 அடி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மகாலட்சுமி உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.
இது குறித்து கீழ்பென்னாத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.