

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 445, பெண்கள் 311 என மொத்தம் 756 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 130, சென்னையில் 112 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 20,271 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 26 லட்சத்து 75,174 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 847 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
அரசு, தனியார் மருத்துவ மனைகளில் நேற்று இளைஞர் கள், முதியவர்கள் உட்பட14 பேர் உயிரிழந்தனர்.