திருப்பத்தூரில் மாட்டு வண்டி பந்தயம் : அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூரில் நடந்த மாட்டு வண்டி பந்தயம்.
திருப்பத்தூரில் நடந்த மாட்டு வண்டி பந்தயம்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்பத் தூரில் மருதுசகோதரர்கள் நினைவுதினம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி மாட்டு வண்டிப் பந்தயம் நடந்தது.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

சிறிய மாடு பிரிவில் 44 ஜோடி கள் பங்கேற்றன. இதனால் 2 பிரிவுகளாகப் போட்டிகள் நடந் தன.

முதல் பிரிவில் வள்ளியூர் ஆனந்த் முதலிடம், வடகுடி நெல்லியாண்டவர் 2-ம் இடம், மாவிலங்காவயல் சுந்தரபாண்டி யன் 3-ம் இடம், சுண்ணாம்பிருப்பு ராஜமுடி 4-ம் இடம் பிடித்தனர்.

இரண்டாவது பிரிவில் சுண்ணாம்பிருப்பு ராஜமுடி முதலிடம், பரளி சித்தார்த் 2-ம் இடம், கோ.வேலங்குடி ராஜசேகர் 3-ம் இடம், கண்டவராயன்பட்டி முரசு, வெளிமுக்கிவாகினி ஆகியோர் 4-ம் இடம் பிடித்தனர்.

பெரிய மாடு பிரிவில் 22 ஜோடிகள் பங்கேற்றன. இதில் சீவலப்பேரி சுப்பையா பாண்டியன் முதலிடம், அவனியாபுரம் மோகன் 2-ம் இடம், நல்லாங்குடி முத்தையா, அமராவதிபுதூர் வேலு கிருஷ்ணன் 3-ம் இடம், வெள்ளாளப்பட்டி மகாவிஷ்ணு 4-ம் இடம் பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in