கனமழை காரணமாக : 13 விரைவு ரயில்களின் சேவை ரத்து :

கனமழை காரணமாக : 13 விரைவு ரயில்களின் சேவை ரத்து :

Published on

கனமழை பெய்து தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், 13 விரைவு ரயில்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.

அதன்படி, சென்னை எழும்பூர் - ஜோத்பூர் (22663), செங்கல்பட்டு - காகிநாடா (17643), சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டா (17238), சென்னை சென்ட்ரல் - புதுடெல்லி (12621), சென்னை சென்ட்ரல் - ஹவுரா மெயில் (12840) உட்பட 13 விரைவு ரயில்களின் நேற்றைய சேவை ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மழைநீர் வடிந்த பிறகு, பாதுகாப்பு உறுதி செய்த பிறகு படிப்படியாக ரயில்களின் சேவையை மீண்டும் தொடங்குவோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in