

திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசிப்பவர் முகுந்தன். இவரது மகள் ஜீவிதா (19) காஜாமலையிலுள்ள பெரியார் ஈவெரா கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 3 நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருந்த நிலையில் அக்.18-ம் தேதி அவரது மூக்கு, வாயிலிருந்து ரத்தம் வடிந்துள்ளது. அதிர்ச்சி யடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஜீவிதாவை, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.