நெல்லையில் 20 நாட்களில் 2,027 மி.மீ. மழை : கடந்த 2 ஆண்டுகளைவிட அதிகம்

திருநெல்வேலி அருகே சுத்தமல்லி தடுப்பணையில் பாய்ந்தோடும் தண்ணீர். படம்: மு.லெட்சுமி அருண்.
திருநெல்வேலி அருகே சுத்தமல்லி தடுப்பணையில் பாய்ந்தோடும் தண்ணீர். படம்: மு.லெட்சுமி அருண்.
Updated on
2 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் மட்டும் 2,027 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 2 ஆண்டுகளைவிட அதிகமாகும்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால், திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்துவருகிறது. அவ்வப்போது கனமழை பெய்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், பள்ளிகளுக்கும் விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. வள்ளி யூர், பண குடி, ராதாபுரம் வட்டாரங் களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் மட்டும் 2,027 மி.மீ. மழை பதிவாகியிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக் கின்றன. அதிகபட்ச மழை பாளையங்கோட்டையில் பதிவாகி யிருக்கிறது.

மாவட்டத்திலுள்ள முக்கிய அணைப்பகுதிகளிலும், பிற இடங்களிலும் நவம்பர் 1 முதல் 20-ம் தேதி காலை 8 மணிவரையில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்):

பாளையங்கோட்டை- 337, சேரன்மகாதேவி- 315.60, அம்பாசமுத்திரம்- 289.50, நாங்குநேரி- 242.10, ராதாபுரம்- 227.40, மணிமுத்தாறு- 222.60, திருநெல்வேலி- 205.90, பாபநாசம்- 187 உட்பட மொத்தம் 2,027.10. இது கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிக அளவாகும். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 20 நாட்களில் 1,991.40 மி.மீ. மழையும், கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20 நாட்களில் 1,231.70 மி.மீ. மழையும் பதிவாகியிருந்தது.

பாபநாசம் அணையில் 96.60 சதவீதம், சேர்வலாறு அணையில் 83.68, மணிமுத்தாறு அணையில் 56.59, வடக்கு பச்சையாறு அணையில் 26.98, நம்பியாறு அணையில் 100, கொடுமுடியாறு அணையில் 92.16 சதவீதம் தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதேகாலத்தில் பாபநாசம் அணையில் 80.33 சதவீதம், மணிமுத்தாறு அணையில் 57.85 சதவீதம் தண்ணீர் இருந்தது. தற்போது, 100 சதவீதம் நீர் இருப்பை கொண்டுள்ள நம்பியாறு அணையில் கடந்த ஆண்டு 12.57 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருந்தது. பாபநாசம் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி 2,165 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,616 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. தாமிரபரணி பாசனத்துக்கு உட்பட்ட கன்னடியன் கால்வாயில் 300 கனஅடி, கோடகன் கால் வாயில் 150 கனஅடி, மருதூர் மேலக்காலில் 700 கனஅடி, மருதூர் கீழக்காலில் 355 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது.

நேற்று காலை 8 மணி வரையான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 6, சேரன்மகாதேவி- 3.20, மணிமுத்தாறு- 5.40, பாளையங்கோட்டை- 3, பாபநாசம்- 17, .

தென்காசி

மாவட்டத்தில் உள்ள 5 அணைகளும் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளன.

இதனால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடனாநதி அணையில் இருந்து விநாடிக்கு 100 கனஅடி, ராமநதி அணையில் இருந்து 30 கனஅடி, கருப்பாநதி அணையில் இருந்து 70 கனஅடி, குண்டாறு அணையில் இருந்து 54 கனஅடி, அடவிநயினார் அணையில் இருந்து 112 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in