லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு :

லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு  :
Updated on
1 min read

கடையம் அருகே உள்ள புலவனூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவரது மகன் கதிர்வேல் (23). இவர், தென்காசியில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். திரவியநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த மினி லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கதிர்வேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாவூர்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in