உறுப்பினர் அட்டையை உரியவரிடம் வழங்குங்கள் : அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் உத்தரவு

உறுப்பினர் அட்டையை உரியவரிடம் வழங்குங்கள் :  அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் உத்தரவு
Updated on
1 min read

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:

கட்சியின் அமைப்பு தேர்தலைமுன்னிட்டு, உறுப்பினர்கள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளவும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான பணிகள் கடந்த 2018-ல்தொடங்கப்பட்டது. அதன்படி, விண்ணப்பித்தவர்களுக்கான உறுப்பினர்கள் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. உறுப்பினர் அட்டைஉள்ளவர்கள் மட்டுமே கட்சிஅமைப்புத் தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் முடியும்.

தலைமைக் கழகத்தில் இருந்துஉறுப்பினர் அட்டையை பெற்றுச்சென்ற நிர்வாகிகள், அவற்றைஉரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. எனவே, உறுப்பினர் அட்டைகளை உரியவர்களிடம் உடனடியாக நிர்வாகிகள் ஒப்படைத்து, அதன் விவரங்களை தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in