

கடலூர் திமுக எம்.பி.யான டிஆர்விஎஸ் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணிபுரிந்த கோவிந்தராசு என்பவர்அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தேடப்பட்ட எம்.பி. ரமேஷ் கடந்த அக்.11-ம் தேதி பண்ருட்டிநீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.பின்னர், அவர் கடலூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரிசென்னை உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி எம்.நிர்மல்குமார்முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ‘காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்ககூடாது. விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது’ என்றநிபந்தனையுடன் ஜாமீன் வழங்கிநீதிபதி உத்தரவிட்டுள்ளார்.