கிருஷ்ணகிரியில் கொட்டித் தீர்த்த கனமழை - தென்பெண்ணை ஆற்றில் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம் :

கிருஷ்ணகிரி அணையில் இருந்து பிரதான மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணையாற்றில் சீறிப் பாய்ந்து செல்லும் தண்ணீர்.   அடுத்த படம்: கிருஷ்ணகிரி அணை இணைப்புச்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் நீந்தியபடி சென்றன.             படங்கள்: எஸ்.கே.ரமேஷ்
கிருஷ்ணகிரி அணையில் இருந்து பிரதான மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணையாற்றில் சீறிப் பாய்ந்து செல்லும் தண்ணீர். அடுத்த படம்: கிருஷ்ணகிரி அணை இணைப்புச்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் நீந்தியபடி சென்றன. படங்கள்: எஸ்.கே.ரமேஷ்
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் கொட்டிய மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா, ஆந்திரா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆறு, அதன் கிளை நதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை, ஊத்தங்கரை பாம்பாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 3,500 கனஅடியும், கிருஷ்ணகிரி அணைக்கு 16,600 கனஅடியும், பாம்பாறு அணைக்கு 8,123 கனஅடியும் நீர்வந்து கொண்டிருந்தது. அணைகளின் பாதுகாப்பு கருதி கெலவரப்பள்ளி அணையில் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியும், கிருஷ்ணகிரி அணையில் 19,600 கனஅடியும், பாம்பாறு அணையில் இருந்து 7,999 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் ஆய்வு

இதேபோல் எம்எல்ஏக்கள் கே.பி.முனுசாமி, அசோக்குமார், மதியழகன் முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

சாலையில் வெள்ளம்

ஊத்தங்கரை பரசனை ஏரி நிரம்பி வெளியேறிய உபரிநீர், அண்ணா குடியிருப்பு பகுதியில் புகுந்ததால், 200-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஊத்தங்கரை - சிங்காரப்பேட்டை சாலையில் தண்ணீர் அதிகளவில் சென்றதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டன.

பயிர்கள் சேதம்

மழையளவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in