3,112 புதிய பேருந்துகளை வாங்க நடவடிக்கை : அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்

3,112 புதிய பேருந்துகளை வாங்க நடவடிக்கை :  அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் 500 மின்சார பேருந்துகள் உட்பட 3,112 புதிய பேருந்துகளை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. போக்கு வரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமை வகித்தார். ஆட்சியர் சங்கர்லால் குமாவத், காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), கருமாணிக்கம் (திருவாடானை), மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜெ.பிரவீன்குமார் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப் பன் கூறியதாவது: மழையால் பாதிக்கப்பட்ட பயிருக்கான இழப்பீடு குறித்து கணக்கெடுக்கப் படுகிறது. உரத் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவட்டத் துக்கு விரைவில் 1,300 டன் உரம் கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் 500 மின்சார பேருந்துகள் உட்பட 3,112 புதிய பேருந்துகளை வாங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in