

வீரவநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி அ. சங்கர் அய்யப்பன் (22) என்பவர் உயிரிழந்தார்.
வீரவநல்லூர் அருகேயுள்ள வெள்ளங்குளியை சேர்ந்த அருணாசலம் மகன் சங்கர் அய்யப்பன். அங்குள்ள மரக்கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது எதிர்பாராத வகையில் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கிவீசப்பட்ட சங்கர்அய்யப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வீரவநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்கள்.