ஆன்லைனில் கடந்த 8 ஆண்டுகளில் - 1.59 லட்சம் ஆர்டிஐ விண்ணப்பம் : மத்திய பணியாளர் அமைச்சகம் தகவல்

ஆன்லைனில் கடந்த 8 ஆண்டுகளில் -  1.59 லட்சம் ஆர்டிஐ விண்ணப்பம் :  மத்திய பணியாளர் அமைச்சகம் தகவல்
Updated on
1 min read

கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கமோடர் லோகேஷ் கே.பத்ரா என்பவர், தகவல் அறியும்உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் மத்திய பணியாளர் துறைக்கு விண்ணப்பம் ஒன்று அனுப்பினார்.

அதில், தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் தகவல்களை அறிவதற்காக மத்திய அரசு இணையதளம் தொடங்கப்பட்டது. அந்த இணையதளம் தொடங்கப்பட்ட பிறகு எத்தனை பேர் ஆர்டிஐ விண்ணப்பங்கள் அனுப்பினர். அவர்களில் ஆண்கள் எத்தனை பேர், பெண்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

அதற்கு பணியாளர் அமைச்ச கம் அளித்துள்ள பதிலில் கூறி யிருப்பதாவது:

கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ம் தேதி முதல் 2021 நவம்பர் 12-ம் தேதி வரையிலான 8 ஆண்டுகளில், ஒரு லட்சத்து 59,107 விண்ணப்பங்கள் ஆன்லைனில் வந்துள்ளன. அவர்களில் 11,376 பேர் பெண்கள். இது மொத்த விண்ணப்பங்களில் 7 சதவீதத்துக்கு சற்று அதிகமாகும். ஒரு லட்சத்து 47,731 பேர் ஆண்கள்.

இவ்வாறு பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in