

பத்ம விருதுபெற்ற இந்திய மகளிர் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அனிதா பால்துரைக்கு, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், துணைத் தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, எம்.என்.ராஜா, பொதுச் செயலர் கரு.நாகராஜன், விளையாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய அண்ணாமலை, “கிராமப்புற பெண்களுக்கு உதவுவதாக அறிவித்துள்ள அனிதாவுக்கு, கார் வாங்குவதற்காக பாஜக சார்பில் ரூ. 10 லட்சம் வழங்கப்படும்” என்றார்.